தேவை ஒரு விவசாயபுரட்சி! (கவிதை திருவிழா)

விளைநிலமெல்லாம்
வீடானால் என்ன?
கப்பலில் விவசாயம் செய்கிறான்
நவீன விவசாயி!

நிலாகூட
பசுமை ஆக அங்கும்
நடக்குதப்பா
உழவும், நடவும்!

நதிகள் தேசியமயம் ஆனதால்
விலையுதப்பா முப்போகம்
நஞ்சையும் புஞ்சையும்!

விடைபெற்றோடின
உலகபோர்களின் எச்சங்கள்
யுரியவும் பூச்சிக்கொல்லிகளும்
உயிர் உரமும், நுண் உரமும்
உறவாடுதப்பா
நிலம் சிரிக்க!

மின்சார வாரியமும்,மின் வெட்டும்
இங்கில்லை- ஒரு துளி
காற்றும்,நீரும்,
ஒளியும்,எருவும் கூட
வீணாகாமல் நடக்குதப்பா
மின்சார அறுவடை!

இடைத்தரகன் இங்கில்லை!
பதுக்கலும் பஞ்சமும் இனியில்லை!
விற்கிறான் விவசாயி
நேரே மக்களிடம்
அவன் விலைக்கே!

அடுக்குமாடி வீடுகளில்
மொட்டை மாடிகளில்
தொங்குதப்பா
பந்தலிலே பாகற்காயும்
சுரைக்காயும்!

படிக்குதப்பா பிள்ளைகளும்
விவசாயம் பள்ளியிலே!

இங்கே அலங்கார வளைவுகள்
இல்லை! மஞ்சள் பச்சை
கொடிகள் இல்லை
வெள்ளை கொடி காட்டி
பறக்குதப்பா
கொக்கும் நாரையும்!

இத்தனையும்
நடக்க
உழவன் வாழ்வு
செழிக்க
தேவையப்பா
ஒரு விவசாய புரட்சி!

எழுதியவர் : சரவணா (7-Jun-12, 6:34 pm)
பார்வை : 258

மேலே