அப்பா...

அப்பா .......அப்பா ...... அப்பா .....

இந்த வார்த்தைகளை என்னால்
கேட்கத்தான் முடிகிறது...
கூப்பிட முடியவில்லை ...

குழந்தைகள் அனைவரும் அப்பா என்று
அழைக்கும் போது -என் மனதில்
உங்கள் ஞாபகம்-என் கண்களில் கண்ணீராய்
வந்து எட்டிப்பார்க்கிறது...

என் கையை பிடித்து-எனக்கு
வழிகாட்டும் வயதில் -என் கையை
விட்டுப் போனீர்களே ஏனப்பா ...?

எனக்கு பள்ளிக்கூட பாடம் சொல்லிக்கொடுக்க நீங்கள் வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன்
ஆனால்.....,
நீங்கள் எனக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டீர்களே அப்பா....!

நான் சரியாக படிக்க வில்லை என்று என்னை தூணில் கட்டிப்போட்டு - புளியங் கொம்பால் அடித்தீர்களே அப்பா..
நான் இப்போது நன்றாகப் படிக்கிறேன்...நீங்கள் எப்போது வருவீர்கள்...?

நான் பத்தாம் வகுப்பு பாஸ்-ஆன செய்திகேட்டு அனைவரும் பாராட்டினார்கள்...
ஆனால் அந்த செய்தியை கேட்க்கக் கூட
நீங்கள் இல்லையே ஏனப்பா.?


கரடு முரடான இந்த வாழ்க்கையை

"நான் இருந்து உனக்குக் கற்றுகொடுபதை விட
நான் இல்லாமல் இருந்தால்தான் உன்னால் கற்றுக்கொள்ள முடியும்" - என்று நினைத்து

என்னை தனியே தவிக்க விட்டு விட்டுப் போனீர்களோ அப்பா ...?

நீங்கள் எனோடு இருக்கும் போது எனக்கு எதுக்கப்பா வாழ்க்கை பாடம்...? -நீங்கள்
வாழும் வாழ்க்கையே ஒரு பாடம்தான்..

சாலையில் சிலர் தங்களுடைய வாகனத்தில்
"IT 'S .. MY DAD'S GIFT " என்று எழுதியிருப்பார்கள்...
அந்த வாசகத்தை படிக்கும் போது என் மனம் ஒரு இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்து விடுகிறது அப்பா....

நான் பிறந்த பொழுது -நீங்கள்
என்னை எவ்வாறு உருவாக்க வேண்டும்
என்று ஆசைப்பட்டீர்களோ-அந்த இலக்கை
நான் அடைய எனக்கு குருவாய் இருந்து உணர்த்திடுங்கள் அப்பா...

என்றும் உங்கள் நினைவில்
22 ஆண்டுகளுக்கும் மேலாக
ஓடிக்கொண்டே இருக்கும்
நீங்கள் எனக்குக் கொடுத்த
உங்கள் இதயம்....

பசுவைஉமா...

எழுதியவர் : பசுவைஉமா (9-Jun-12, 7:14 am)
Tanglish : appa
பார்வை : 232

மேலே