ஒப்பில்லா உழவு (கவிதை திருவிழா ) 2

உழவர் திருநாளை
ஏதோ சடங்குபோல
நினைத்து வழிநடத்துபவர்களே !

அவர்கள் கோவணத்தோடு
வயலில் இறங்குவதனால்தான்
நாம்
ஆணவத்தோடு ஆபிஸ்
படிகளில் ஏறமுடிகிறது !

அவர்கள்
அறுவடை செய்ய
அரிவாள் ஏந்தி
குனியும் போதுதானே
நம்
நெஞ்சங்கள் எல்லாம்
நிம்மதி மூச்சுவிட்டு
நிற்கின்றனர் !

அவர்கள் சிந்தும்
வியர்வை அல்லவா
நம்
நாட்டின் உயர்வை
உயர்த்தி சென்றது அன்று
அன்னியர்க்கு !

அவர்கள் ஏறுகொண்டு
உழுது பயிர் செய்து
உணவு அளித்ததாலேதான்
நாம்
ஏழடுக்கு மாடியில் அமர்ந்து
உண்டு உறங்கி நிம்மதியாக
உயிர் வாழ்கிறோம் .!

அவர்கள் பயிருக்கு
உயிர் கொடுக்க , உரமிட்ட
உள்ளங்கைகள் அல்லவா
நம்
உன்னதமான வாழ்க்கைக்கு
உரமிடுகிறது !

உழவர்களும், உயிர்களும்
பசுமையும் , பயிர்களும்
வாடிக்கிடக்கும் இந்நேரத்தில்
உலக அழகி போட்டி அவசியமா?
உன்னத உலகில் !

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்றுமுதல் "ஒப்பில்லா உழவுக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (9-Jun-12, 10:45 am)
பார்வை : 261

மேலே