ஒப்பில்லா உழவு (கவிதை திருவிழா )
பழந்தமிழகத்தில்
உழுபவரே உயர்வாக
போற்றப்பட்டனர், தமிழர்
உழுது பயிர் செய்து
உலகை காக்கும்
உழவுத்தொழிலை போற்றினர்
அன்று !
உழுதுண்டு வாழ்வாரே வால்வர்ர்
என்பது திருக்குறள், அப்போது
உழுதுண்டு வாழ்பவர் , வாழபோகிறவர்
யார் ? என்பது பெருங்குரல் இப்பொது !
உண்டிகொடுத்தோர்
உயிர்கொடுத்தோரே என்பது
அன்றைய புகழ்மொழி
உண்டி கொடுத்தோர்க்கு
உயிர் கொடுக்க இயலவில்லை உழவர்க்கு
என்பது இன்று இகல்மொழி !
உழவுக்குச் சிறப்புப் பெற்ற
மருதநிலம் , வயலும்
வயல்சார்ந்த இடமாக
வகைபடுத்தபட்டு இருந்தது
மருத நிலத்தின் பெருமை
வேந்தனை முதன்மை
படுத்தியது அன்று !
வயலும் , வயல்சார்ந்த இடமும்
உழவுக்கு உயிர்கொடுத்த இடமும்
வீதியும் , வீடுச்சர்ந்த இடமாக
பெட்ரோலும் , டீசலும் சார்ந்த கிணறுமாக
தொழிற்சாலையும் , புகையும் சார்ந்த இடமாக
மாறிய மருதநிலம் ,
வேந்தனை முதன்மை படுத்திய தமிழர்
வேதனைகுரியவராக மாறியது வியப்பு (விதி ) !
சிந்திப்போம் , உழவுக்கு கைகொடுப்போம்
சீருடன் செயல் படுத்துவோம் உழவை..
சிரம்தாழ்த்தி உயர்த்துவோம் ஒப்பில்லா உழவை
என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்றுமுதல் "ஒப்பில்லா உழவுக்காக