உங்களின் அரசியலை போலவே

குடி அரசு தினம் ..!

இன்று ...
குடியரசு தினமாம் ...
மக்களாட்சி மலரப்பெற்ற...
மகத்தான தினமாம் ..சிரிக்காதீர்கள் ..!
புரவிகளோடு அணிவகுப்பும் ...
ஆயுதங்களின் பளபளப்புமோடு..
அரசு விழா ..அவசரவிழாவாக ....!!!
தொலைக்காட்சியிலும் ..வானொலியிலும் ..
முதல் குடிமகன் ..படித்து ஒப்பிக்கிறார் ..
அசோகர் மரம் நட்டதையே ..வருடம்தோறும் ..!?
பிரதமரும் தொகுப்புரை வாசிக்கிறார் ..
சலனமே இல்லாமல் ஏதோ சாதித்துவிட்டாராம் ..!!!
ஏழை தொழிலாளர்களின் ....கண்ணீர் உரை..?
குடிமக்களின் ..வறுமையும் ..வாழ்கையும் ..
விண்ணையும் விஞ்சி விரைகிறது ...
நீங்கள் நிலவை ஆராய ..
கோடிகளை கொட்டி வரிப்பணத்தை ..??
விவசாயி ...விதியற்று சாகிறான் ...
நீங்கள் சாகாத சண்டைக்கு ...
ஆகாத ஆயுதம் கொள்முதல் ...?
எங்கள் நெல்மணிகள் விலைகொள்ளாமல்..
வீதியில் புளுத்துப்போய் புழுவாய் நெளிகின்ற ..
உங்களின் அரசியலை போலவே ...?!
இனி ..
குடியரசு தினமும் ..சுதந்திர தினமும் ...
வேண்டவே வேண்டாம் ...?!
விவசாயிகள் தினமும் ...
தொழிலாளர்கள் தினமும்...கொண்டாடுவோம் !

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (10-Jun-12, 2:02 pm)
பார்வை : 201

மேலே