கரையோர நாணல்களே
எங்கள் கதை கேளுங்களேன்
கவிஞர்களே!
காற்று வீச்சு வீசும் வரை
நாங்கள் வீசுவோம்!
மழை நீர் தேங்கும் வரை
நாங்கள் தேங்கிடுவோம்!
ஆற்று நீர் எங்களிடம் தஞ்சம் !
இவை இருக்கும் வரை நாங்கள்
திசையின் வேகம் வீசும் வரை!
காற்றோடு பயணம் செய்வோம்
எங்கள் வாழ்க்கை யாருக்கும்
பயன்படாத நச்சுப் பயிர்!
நாங்கள் விருப்பம் போல வீசுவோம்
எங்களை நாணம் என்று
நீ நினைத்தால் நான்
உன் வசம் என் நினைவுகளில்!
நாணம் எங்கள் நினைவுகளில் !
ஆற்று நீர் எங்கள் இன்ப
அணைப்புகளில்! என்றுமே
எங்கள்
வாழ்க்கை கரையோரமே!