விழிகள் தேடிய கவிதையே...!

என் விழிகள் தேடிய கவிதையே
விரல்கள் கோர்த்திடும் பதுமையே

உன் விழி பார்த்து
என் உயிர் வாழும்
என் உயிர் வாழ
உன் விழி தேடும்

மனதுக்குள் தினம்
ரனமடி பெண்ணே
கனவுக்குள் உன்னை
காணும் நாட்கள்

அனிச்சையாய் உன் விழிகளும்
அசைந்திட்டால் மனம் துடிக்குமே
அனுமதி உன்னை கேட்காமல்
அழகினை மனம் ரசிக்குமே

பெண்ணே உந்தன் பாதம்
பட்டுவிட்டால் போதும்
என் கல்லறையில் கூட
பூக்கள் பூக்கும்...!

கண்ணே உந்தன் பார்வை
தீண்டிச் செல்லும் போது
மின்மினிகள் வந்து என்னை
தூக்கிச் செல்லும்....!

கண்ணுக்குள்ளே தீப்பொறி
விழுந்திடும் உன் பார்வையால்
நெஞ்சை ரெண்டாய் மின்னல்
பிளந்திடும் உன் சுவாசத்தால்

உன் விழி பார்த்து
நான் வழி மறப்பேன்
என் வழி தேடி
உன் விரல் பிடிப்பேன்...!

எழுதியவர் : கதிர்மாயா (11-Jun-12, 8:11 pm)
சேர்த்தது : கதிர்மாயா
பார்வை : 318

மேலே