பாலை வன வேதனை......
சுட்டேரிக்குது வெயில்
கொட்டி தீர்க்குது வியர்வை
காற்று கூட வீசவில்லை, சிறு
மர நிழல் கூட இல்லை
களைப்பாறி சென்றிட....
பணம் என்ற ஒன்றை தேடி
பாலைவனம் வந்தோம்...
அரை வயிறு உணவும்
குறைக்கண் தூக்கமும்
எமக்கு தந்த வரம் -இந்த
பாலை நில பண மகள் ...
ஏசிக்கார் பறக்குது எம் முன்னே
தூசிகள் பறந்தடிக்குது
எம் கண்ணுள்ளே...
கண்கள் கலங்குது
கரணம் தூசியா இல்லை
எம் மன வேதனையா?
புரியலையே????????????