வரமொன்று கேட்கிறேன் கடவுளிடம் ....

((((((நாளை எனது 12 வது திருமண நாள் ....
முன்பாகவே வாழ்த்து சொன்ன எழுத்து உலக நண்பர்களுக்கு நன்றிகள் ...
எனக்கான என்னவன் கணேஷ்((((என் அன்பு கணவர் ....அதிக எழுத்து நண்பர்களுக்கு பரிச்சயமானவர் )))) அவர்களுக்கு இந்த கவிதை
சமர்ப்பணம் ((((((கடவுளுக்கு நன்றி எனக்கான என்னவனை
எனக்காக தந்ததற்கு))))))))))......
********************************************************************************************************
வரமொன்று கேட்கிறேன் கடவுளிடம் ......
--------------------------------------------------------------------------------------------------------------------------
என் உயிரில் கலந்தவனே !
என் உயிரானவனே !
என் உணர்வில் கலந்தவனே!
எனக்கான சுவாசங்களை தந்தவனே !
என் சுதந்திர சிறகுகளை வளர்த்தவனே!
எனக்கான வசந்தங்களை வாரி தந்தவனே !
நேர்மறை எண்ணம் கொண்டவனே !
தன்னம்பிக்கையை வாரி வழங்கியவனே
ஜெயிக்க பிறந்தவனே !
வெற்றிகள் மட்டுமே உன் இலக்குகளானது.....

கோழை என்னை தைரியமாக்கி
துணிச்சல் ஊட்டியவன் நீ ...

கல்லாய் போன என்னை
சிலை ஆக்கி அழகு பார்த்தவன் நீ......

மீன் குஞ்சுகளை கண்ணில்
வைத்து பார்ப்பது போல -என்னை
உன் கண்ணில் வைத்து பார்க்கிறாய் ......

திரும்பி பார்கிறேன்.....ம்.......
அதற்குள் 12 வருடங்கள் ஆகி விட்டனவா.....

நீ தலையில் பூசும் கருப்பு சாயத்துக்கு
மட்டுமே உனக்கு வயதானது தெரியும் ....
ஷ் ரகசியம் ...

ஆச்சரியம் ஆனால்
இன்னும் நீ என் புது மாப்பிள்ளை ......

நான் உந்தன் மஞ்சள் மணக்கும்
புது தாலியோடு வலம் வரும் புது மனைவி .....

என் கண்ணாடி வளையல்களோடு
வம்பிளுப்பவன் நீ .....

என் கால் கொலுசுகளோடு
கோபித்து கொள்பவன் நீ ....

என் புடவகளோடு
பகையானவன் நீ .....

ஒவ்வொரு நாளும்
புதிதாய் பிறக்கிறோம்
புதிதாய் வாழ்கிறோம்
சந்தோஷ பறவைகளாய் ...

வன்முறை முத்தங்களால்
அகிம்சை தாம்பத்யம் நடத்துபவன் நீ ......

முத்தான அரும்புகள் என் வயிற்றில்
பூத்த போது நீ என்னை தாலாட்டினாய்....
தாய்க்கும் மேலாய் சீராட்டினாய்.....

குறையாத அன்பை
நிறையவே தந்தவன் நீ .....

நம் கஷ்டங்களில் நம்பிக்கை
விதைகளை மட்டுமே விதைத்தவன் நீ

துக்கங்களை உனதாக்கி
சந்தோசங்களை பரிசாக்கியவன் நீ ......

நமது கண்ணீர் கதைகளுக்கு
சந்தோஷ தலைப்பிட்டவன் நீ ..........

அன்றில் பறவையாய் வாழ்கிறேன்
நீ இன்றேல் நானில்லை ...

வரமொன்று கேட்கிறேன் கடவுளிடம் ........
என்னவனோடு
ஏழேழு ஜென்மம் வாழ வேண்டும் ............

இப்போதே நூறு நூறு
நூற்றாண்டு வாழ வேண்டும் ............

என் உயிர் பிரியும் முன்
நான் அவன் மடியில் சாய வேண்டும்.....

கடைசியாய் அவனோடு
உரையாடி முடிக்க வேண்டும் .........

அவன் முகம் பார்த்து
என் விழி மூட வேண்டும்....
வரமொன்று தருவாயா....

எழுதியவர் : info.ambiga (11-Jun-12, 8:29 pm)
பார்வை : 446

மேலே