எங்கோ சென்றுவிட்டாள்....
எங்கோ சென்றுவிட்டாள் அவள்....
என் உணர்வை வருடி,
இமைகள் திருடி,
சுமைகள் கொடுத்து,
காதல் அலைகள் ததும்ப,
கண்களின் நீர்நிலைகள் நிரம்ப,
எங்கோ சென்றுவிட்டாள் அவள்....
உலகைப் பிரியும் போது
எனக்குத் துயரிருக்காது,
உன்னைப் பிரியும் போது
என் ஊனில், உயிரிருகாது....
வாழ்வின் சுகம் இரவுகளில்,
இரவின் சுகம் உறக்கங்களில்,
உறக்கத்தின் சுகம் கனவுகளால்,
கனவுகளின் சுகம்,
அதில் நீ வருவதனால்....
இறக்கம் சற்றுமின்றி,
இரவில், என் உறக்கம் பறித்தாயடி....
உறக்கம் போனாலென்ன,
உருவான கனவுகளைக் காண்பேனடி...பகலில்
நான் கவிதை வடித்தால்
அதன் கவித்துவம் ரசித்தாள்....
கவிஞர் உள்ளம் மட்டும்
ரசித்திட மறுத்தாள்....
மதிக்கு மட்டும் கொண்டு சென்றாள்,
உள்ளத்திடம் கொண்டு செல்ல மறுத்து நின்றாள்...எம் கவிதைகளை
வாழும் காலமெல்லாம் வருடும் உன் நினைவை,
வளரும் என் வயதைக் கொண்டு புதைப்பேனோ....
எம் உறக்கத்தைத் துறத்தும் உம் கனவுகளையெல்லாம்,
உந்தன் உளறல்கள் கொண்டு மறைப்பேனோ....
உன்னைக் கண்ட போது
உறவுகளையெல்லாம் மறந்தேனடி....
உயிர் கொடுத்த அன்னை மட்டும்
உன் உருவில் நின்றாளடி....
பழகிய போது,
பிரிவாய் என எண்ணவில்லை....
பிரிந்த பிறகு,
நாம் பழகியதை நம்ப முடியவில்லை....
அவள் பதில் கேட்க,
பாதியில் வந்தது கலக்கம்....
என் கலக்கம் நீத்து,
மீதியும் கேட்டேன் அவள் விளக்கம்....
இதழோரம் உவகை தந்தாள் அன்று,
ஏனோ...
விழியோரம் ஈரம் மட்டும் தந்தாள் இன்று....
இனி...
நான் நடக்கும் பாதை,
அவளுடன் அல்ல....
அவ்விடத்தில் எவரும் இல்லை,
என் தனிமையைக் கொல்ல....