கழிவிலேற்றப்படும் கூச்சங்கள்

ஆதி இரவில் மீதி இல்லை நாழிகைகள்,
அதிக மகிழ்வைத் தரும் அழகு நிகழ்வுகள்,
இதழ்கள் இணைகையில் இணையில்லா ஒரு
இனிபோ இது என்ற நினைப்பு,
விரல் உடல் எங்கிலும் விலைப் பேசும்,
உடன் சேர்ந்து கலையும் பேசும்,
மழையோ எனும் உணர்வு மனதில் தோன்றும்
வியர்வை தான் என்று அயர்வுக் கூறும்,
உடல்களின் வாசங்கள் கூச்சத்தை கழுவிலேற்றும்,
இருளிலே ஒளிரும் முழுமதியாகிடும் விளக்கணைக்கையில் அவளின் முகம்,
உண்டோ இதனையொத்த சுகம் வேறொன்றிலே.

எழுதியவர் : த.பொன்மாரியப்பன் (13-Jun-12, 3:50 pm)
பார்வை : 180

மேலே