சமூக அவலம்..!(கவிதை திருவிழா)
கோடியை குவித்தவனுக்கும்
கேடீயாய் திரிந்தவனுக்கும்
நாடி செல்கிறது உயர்பதவி..
நாடு பார்க்க
ஆண்டியாய் மாறியவனுக்கும்
நாட்டை ஆண்டியாய் மாற்றுபவனுக்கும்
பேதமில்லை ஒரு வகையில்..
இருப்பதை எல்லாம்
பறித்துக்கொண்டு
கொசுறாய் கல்வி தரும்
தனியார் பள்ளி
மாணவர்க்கு கிடைத்த சாபம்.. !
அந்நிய மோகம்
ஆடம்பர தாகம்
கடனிலே வாழ்வு போவது
நடுத்தர மக்களின் சோகம்.. !
சோறு போடும் பாட்டாளிக்கு
மிஞ்சிருக்கு கோமணம்..!
அதை கூட பறிக்க பாக்குது
இன்றைய அரசியல்வாதிகளின்
"நல்ல" மனம்....!
பச்சை பெண் குழந்தைக்கும்
பாலியல் கொடுமை..
இச்சை கொண்ட வேலிகளே
இதற்கு தலைமை..!
மனித பிறவிதான் திருநங்கை
மறந்து பார்க்கும்
மனநோய் கொண்டோரின் மடமை..!
தங்கம் விலை ஏற ஏற
அதிகம் வாங்கபடுகிறது ..
கொள்ளையர்களால்
மனிதஉயிர்களின் ரத்தம்.. !
வரதட்சணை கொடுமை குறைவு
மகிழ்ச்சி கொள்ளாதீர்..!
தட்சணை கேட்க பெண்கள் இல்லை
விகிதத்தில் மிக குறைவு..
நீள்கிறது அவலங்களின் பட்டியல்..
வேண்டும் புரட்சியாளர்களின்
வார்த்தை சுத்தியல்..
நிச்சயம் மாறும்
மனித மனங்களின் குப்பைகள்..