கை பேசி

கழிப்பிட வசதி என்ற
அடிப்படை வசதி இல்லாத
குடிசைவாசியை
இன்னும் பல ஆண்டுகள்
நம்மால் சந்திக்க முடியும்

நமக்கு பின்னாலும்
நம் சந்ததியும் நிச்சயம்
சந்திக்கும் என்றாலும்

கையில் கைபேசி இல்லாத
குடிசைவாசியை நாம்
சந்திக்க முடியுமா
இன்னும் சில ஆண்டில் ?

சாதனை இது என்று
பெருமிதம் கொள்வோம்

கை பேசியின் பயன்பாடு
மொத்த ஜனத்தொகையை தாண்டுவதில்
கொள்வோம் உடன்பாடு.
அடிப்படை வசதியை
அப்புறம் பார்க்கலாம்
என்ற துணிவோடு !

எழுதியவர் : அலாவுதீன் (13-Jun-12, 10:17 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : kai pesi
பார்வை : 198

மேலே