ஷேர் ஆட்டோ

குழிஇல்லாமலே
குதித்தாடும்
மூன்று சக்கர தேர்

மஞ்சள் பூசி
மனிதர்களைத் தேடும்
சேவை வாகனம்

பாதையை விட
பாதசாரிகளையே பெரும்பாலும்
கண்காணிக்கும் இதன் பார்வை

ஓட்டுனர் இருக்கையில்
ஒய்யார சவாரி
பல சந்தர்ப்பங்களில்

ஆண் பெண் சமத்துவத்தை
அனுதினமும் அரங்கேற்றும்
அவசரப் பயணம்

தனித்து செல்வதைவிட
திணித்து சென்றாலும்
சிக்கனத்தை நேசிப்போரின்
சிறந்த நண்பன்

நினைத்த இடத்தில்
நின்று செல்லும் இதன் சேவை
பின் வரும் வாகனத்துக்கு
தருகிறது சோர்வை
சிந்திப்போமா !

எழுதியவர் : அலாவுதீன் (13-Jun-12, 10:37 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 502

மேலே