மலர்கள்

ஓரறிவு வண்டிற்கும்
வாயார உணவளிக்கும்
அட்சையப்பாத்திரம்
முற்காலத்தில்
முப்பொழுது அறிய
இயங்கா கைகடிகாரம் .
உமது
பெயரை பிரித்துபார்த்தேன்
சூரிய+காந்தி
பகலைக் கொணரும் -சூரியன்
இருள் மாய்ந்த மாக்களை
வாழ் வெளிசம்மாக்கிய -காந்தி
உன்பெயர் பொருத்தமானதுதான் .


தலையில் பாரம்
சுமக்க மறுக்கும் நங்கை
அந்திப்பொழுது மலரும்
அல்லியே-உன்னை
அள்ளி சுமப்பதேனோ ?


தாமரை இலை மீது ஓட்ட
நிரைப்போல்
நி
நிலத்தை ஒட்டாது
நீரை ஒட்டி உள்ளதால்
உன்னை
பறிப்போரும்,பழிப்போரும்
இலர் .


மல்லிகையே
உமது மண விருட்சத்தால்
கூந்தல் குறைப்பட்டோரும்
சபரி முடி
சரம் சரமாய்
சூடினாளோ?
(மல்லி ) கையால் .


அன்பிற்கு உரிய
ஐவகை நிலத்தின்
தலைமை குறிஞ்சியே
உன் அழகைகாண
ஓராண்டு அல்ல
பன்னிரெண்டு ஆண்டுகள்
தவமிருந்தால் தான்
உமது தரிசனம் .


அரளியே
மக்களால் நி தீண்டத்தகாதவன்
கருவறைக்குள் புகும் பாக்கியத்தால்
நி மக்களுக்கு அல்ல
கடவுளின் சொந்தக்காரன் .


போர்க்காலத்தில்
தலைமகள் உடனில்லாது
தவிக்கும் தலைமகனுக்கு
கார்காலத்தை
களவு ஒழுக்கத்தை
ஓதும் முல்லையே
நி
காதலுக்கு தூது.


முகர்ந்தால் வாடும் அனிச்சமே
அழகை ரசிக்கலாம்
அடைய நினையாதே எனும்
அறவழி போணும்
அணிச்சமே
மக்களுக்கு நி வெளிச்சமே .


ஆங்கில மாத
கடை அச்சாணி
டிசம்பர்
மதப் பெயர் உனக்களித்ததால்
மக்கள் மனதில்
நீங்காது நிலைத்தாயோ .






இளையகவி

எழுதியவர் : இளையராஜா .பரமகடி (15-Jun-12, 12:27 pm)
பார்வை : 246

மேலே