இன்று நிலாச்சூரியன் மலர்ந்த நாள் !
![](https://eluthu.com/images/loading.gif)
நல்லோருக்கு நிலவாய் நீயிருப்பாய்
தீயோரை தீயாய் நீ சுட்டெரிப்பாய் ..
உனது இனம் மனிதம் ...
உனது குணம் புனிதம் ..
உன் பார்வைகள் காந்தம் ...
வார்த்தை ஸ்பரிசங்களில் சாந்தம் ..
நீ சூரியனையும் மகிழ்வூட்டும் குளிர் நிலவு ..
பலிக்கட்டும் உனது ஈழத்து சுதந்திர கனவு ..
நீ மலர்ந்த நாளில் ..
உன் உடன்பிறவா தமையனின் ...
வாழ்த்துக்களும் ...நேசங்களும் ...!