உருகிய காதல்

என் கண்ணீர் துளிகளின்
இடுக்கில் சிக்கிய
என் காதலியின் இதயம்
கருங்கல்லில் பட்டு சிதறிய
பனிக்கட்டிப்போல் சிதறி உருகியது
ஆம்! அந்த சிதறிய பனித்துளிகள்
காதல் அன்பை சுமந்த
ஆறாய் ஓட தொடங்கின
நானோ இலட்சியத்தை
சுமந்துகொண்டு
வாழ்க்கை என்னும் படகில்
அவள் இதயம் என்னும்
கடலில் சவாரி செய்ய புறப்பட்டேன்
அவளோ எங்கள் புனித காதலுக்கு
அர்ச்சனை செய்ய
வரலாற்று புத்தகங்களை
எனக்கு மாலையாகினாள்,
எங்கள் காதல் புரட்சி
என்னும் ஆயுதத்ததை சுமந்துகொண்டு
சமதர்மத்தை நோக்கி
போரிட துவங்கியது.
வெற்றி எங்களுக்குதான் என்பதை
வரலாறு சொல்லும்
என்ற நம்பிக்கையில்
போராட்டம் தொடரும் ..........

எழுதியவர் : எம்.எஸ்.சாஸ்திரி (15-Jun-12, 11:00 am)
பார்வை : 220

மேலே