இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்...(கவிதை திருவிழா பங்களிப்பு)
அரசர்கள் ஆண்டகாலத்தில்
அன்னியநாடுகளின் மத்தியில்
முன்னணியில் நின்றது நம்பாரதம்...
அன்று
அந்நியன் அணிவகுத்தான்
ஆலைகளை கைப்பற்ற அல்ல
விவசாயத்தால் நாம்சேர்த்த
செல்வச்சோலைகளை கைப்பற்ற...
ஆம்
அன்று ஆலைகளும் இல்லை
தொழிற்ச்சாலைகளும் இல்லை
அழகிய விவசாயத்தைத்தவிர...
இன்று
விவாசய நிலங்களை விலைபோட்டு விற்றுவிட்டு
விவசாயியின் வயிற்றில் விரகெரியவிட்டு
உலக அரங்கில்
உயர்ந்து நிற்க நினைக்கிறோம்
நமது
முதுகெலும்பே
முடமகிக்கொண்டிருப்பதை மறந்து...
நாம் நிமிர்ந்து நடந்திட
முதுகெலும்பு முக்கியம்...,
நம் தேசம் உயர்ந்திடவும்
நம் தேசத்தின் முதுகெலும்பான
விவசாயம் முக்கியம்...
முதுகெலும்பை முக்கியப்படுத்து
முதலில் வருவாய்...