சமுக அவலங்கள் 6 (கவிதை திருவிழா)

"சமுக அவலங்களை போக்க
இக்கால மாணவர்களுக்கு
தேவையான பயிற்சிகள் ".

மாணவர்களுக்கு
காந்திய சிந்தனை பரப்பலாம் !

காந்திய வழியில் பல கருத்தரங்கும்
கலந்துரையாடல்கள் நடத்தலாம் !

பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு
கலை பயிற்சி , பண்பு பயிற்சி
பொதுஅறிவு பயிற்சியும் நடத்தலாம் !

யோகா பயிற்சி மன்றம்
வாழ்க்கை நெறிக்கல்வி வகுப்புகள் !

காலம் தவறாமை
பெரியோர்க்கு கீழ்படிதல்
பணிவுடன் வாழும் பெருந்தன்மை
நூல்கள் வாசிக்கும் பழக்கங்கள்
மாணவ எழுத்தாளர் மன்றம் .
போன்றவை நடத்தலாம் !

வாசிக்கும் பழக்கம் ஒரு மனிதனைப்
பிறர் பேச்சைவளர்க்கும் நிலையிலும்
பிறர் நேசிக்கும் நிலையிலும்
உயர்த்தி விடுகின்றது ,
அறிவினை கூர்மையாக்குகிறது
அறியாத பல செய்திகளை தெரியவைகிறது !

"நிறை குடம் நீர் தழுபல் இல் "
கூறியதற்கு ஏற்ப உருமாற்றிவிடுகிறது

ஒருவர் கற்கின்ற நூலளவைதான்
அவர் நுண்ணறிவை மதிப்பிடும்
மதிப்பீட்டு அளவையாகும் - ஔவை
மொழிக்கேற்ப நூல்கள் பலகற்று
மாணவர்கள் நாளைய சமுதாயத்தை
சமுக அவலங்கள் இல்லா நாடாக
உருவாக்கலாம் ......

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்றும் தொடர்கிறேன் "சமுக அவலங்களுக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம் .உ (15-Jun-12, 12:43 pm)
பார்வை : 336

மேலே