வளையத்தை வெட்டிவிடு

வளையத்தை வெட்டி விடு
சிககலெல்லாம் தீர்ந்து விடும்
சொன்னார்கள் தோழர்கள்

புரியாமல நானும்தான்
வளையத்தை வெட்டிவிட்டால்
வளையம் சிதைந்தல்லவா
போய் விடும் என்றேன்

சிதைந்த வளையமே
சிக்கலுக்கு மருந்து என்றார்கள்
புரியாமல் நான் விழிக்க
புரிய வைத்தார் தோழர்தான்

தன பலத்து உழைப்பாலே
தான் பெற்ற சம்பளத்தை
முன் பெற்ற கடனுக்காய்
வட்டிக் கடன் கொடுத்தவர்கள்
வளைத்து நின்றார்
வளையம் போலே

தோழர் சொன்னார்
இறைவா ! இந்த
வளையத்தை வெட்டிவிடு
என் சிக்கலெல்லாம் தீர்ந்து விடும்

தொன்று தொட்ட சொற்றொடர்தான்
என்றாலும் தொழிலாளர்
ஒட்டு மொத்த நிலையிதுதான்

நிலை மாறும் நாள் வரவே
தன நிலை மறந்து கடனைத்தான்
வாங்காதீர் எந்நாளும்
சிக்காதீர் வளையத்தில்

எழுதியவர் : அலாவுதீன் (17-Jun-12, 10:05 am)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 145

மேலே