மரங்களின் மரண குமுறல்கள்
பனிதுளி படர்ந்து இடமெல்லாம்
பகலவன் பட்டு
புகையென கிளம்பும்
பூமியின் பெருமூச்சி புகை எங்கே ?
கார் இருள் விலகிட
காகம் கரய, பறவையின்
கானங்கள் காற்றோடு பரவி
காது தொடும் நேரத்தில்
அலைபேசியின் வழி கதவுகள்
அடைத்து கிடந்ததால்
அலறி அடிக்கும் அலார சத்தத்தில்
மறைந்து போயிருக்குமோ என்னவோ ??
சுவாசிக்க
தாகம் தீர்க்க, விறகெரிக்க, மழை பெற
இன்ன பிற கனா கண்டு
நட்டு வைத்த விதை செடிகள்
சவ பிணங்களாகவே
மண்ணுக்குள் மட்குண்டு
பிறக்க மாறுகின்றனவோ என்னவோ??
புகை இட்டு, பிளாஸ்டிக் நிரப்பி
உரம் போட்டு விஷமேற்றி
விலை நிலம் வீடாய் மாரி
விதை விதைத்தவன்
வியர்வையில் நனைந்து
மழைக்காக காத்திருந்து
காத்திருந்து காற்றும் நின்று போகும்
தருணத்திலாவது தெரிந்து கொள்வாய்
அன்னையை இழந்த குழந்தையாக....
வெயிலடித்தால் இளநீர்
மழையில் நனைத்தால் துளசி
விருந்துக்கு வாழை இலை
மருந்துக்கு மாதுளை
என்று வாழ்ந்த காலம் மாறி
வெயிலுக்கு வெண்ணிலா
மழைக்கு மைக்கா
விருந்துக்கு பிளாஸ்டிக் இலை
மருந்துக்கு மாத்திரை என்று ஆனதென்ன ??
காகித பூக்களுக்கு
வாசனை கொடுக்க முடியாது
மின்னல் இடி சத்தத்தில்
தூரி செல்லும் மழையின் அருமை எல்லாம்
பின்னர் வரும் சந்ததியினருக்கு தெரியாமலே போய் விடலாம்...
உலகின் இயற்கை வளம்
எல்லாம் அழித்த பின்பாவது
மனிதனுக்கு தெரியுமா
கம்ப்யூட்டர் பசியை போக்காது
கம்பன்சோறு போக்கும்
oxford கல்வி தேவையில்லை
oxzygen போதும்
அன்பு காட்ட தங்கை
தேவையில்லை
தாகம் தீர்க்க தண்ணீர் போதும்
சொத்துக்களும் சொந்தங்களும்
சேர்த்த மனிதா
மரங்களை சேர்த்தாயா ??
காதலை சொல்ல பூக்களாய்
கால் கடுக்கும் நேரத்தில் நிழலாய்
காவலுக்காக கதவுகளாய்
பசி போக்க கனியாய்
பிணி போக்க பிரம்மனாய்
இடம் அற்ற ஏழைகளுக்கு
மாளிகையை வாழ்ந்த எங்களை
வாழ விடு ,..
என் மேனி தின்று
வளம் சுரண்டி வாழும் மனிதா
நினைவில் கொள்
வாழும் நாளில்
வசந்தங்கள் வந்து போக வேண்டுமானால்
மனிதர்களோடு மரங்கலாகவாவது
நாங்கள் வாழ்ந்து போகட்டும்