விருந்தோம்பல்

'அறம் செய விரும்பு '
என்ற அவ்வை பாட்டியின் வாக்கின்படி
விருப்பம் இருந்தால்
விருந்தினரை காணும்போது
நம் உணர்வு அதற்கு முன் எப்படி
இருந்தாலும் மனம் மாறி
தெளிந்த நீர் போல !
அவரை வரவேற்கவேண்டும
அப்பொழுதே !

இன்சொல் பேசி மகிழ வேண்டும்.
இன்பமான் இசையைப் போல !
கோபம் கொள்ளாமை,எளிமை,பணிவு
முதலியன நல்ல பண்புகளாம் !

மனதிலிருந்து வரும் இன்சொல்லும்
நம் விருப்பத்தையும் அன்பையும்
கூறாமல் கூறும் பாங்கும்
கண்களுக்கு இமைபோல!
கனிந்த பார்வையும் விருந்தோம்பலின்
அவசியமாம்!

இவை இல்லாமல்..
எவ்வளவு ஆடம்பரமாக வரவேற்பு
அலங்கார வண்ண ஊர்திகளுடன்
வளைவுகள் வைத்து, தோரணம் கட்டி,
மேளதாளம் முழக்கி, விருந்து உணவு
படைத்தாலும், நிறைவடையாது
விருந்தினரின் மனம்!

இந்த பணிவு
என்ற பண்பு இருந்தால
எளிதாகும்
இன்சொல்பேசுவது!

அகந்தை உடையவர் இன்சொல்
பறவைகளின் கூட்டைக் கலைப்பது போல
பேசுவது இயலாத ஒன்று
அவ்வைப் பாட்டியின் கூற்றாம்!

எழுதியவர் : செயா ரெத்தினம் (20-Jun-12, 4:24 pm)
பார்வை : 627

மேலே