காதலாகி நீயணையும்...

விருதுகளின் மேலாய் உனைத்தாங்கி கையேந்தி
உள்ளத்தே மகிழ்காண் உனையணைய - நீயும்
எனதாவாய் ஏந்திழையே என்மடியின் சேயெனவே
தாலாட்டும் இவனுமுன் தாய்..!

காதலாகி நீயணையும் காலத்தே நானிருக்க
காவியமாய் நாம்வாழும் வாழ்வு - நிலம்போற்றும்
நித்திலமே ஏந்திழையே எந்தமிழே ஏற்புடைய
என்னவளே வாழ்கவே நீடு.

- கவிஞர். கவின்முருகு..

எழுதியவர் : - கவிஞர். கவின்முருகு.. (20-Jun-12, 6:09 pm)
பார்வை : 204

மேலே