தமிழ் வாழ்க! தமிழர்கள் வாழ்க!
தமிழ் வாழ்க! தமிழர்கள் வாழ்க!
======================================ருத்ரா
முள்ளிவாய்க்காலில்
மூழ்கிப்போனது
இந்து மகா
சமுத்திரம் எல்லாம்.
தமிழன் ரத்தம்
அத்தனை மலிவா?
சூரியன் கூட
மறைந்து போனது.
ஹிட்லரின் நிழலே
இலங்கைத்தீவில்.
டில்லி வந்து
கை கொடுக்கும்
என்பதெல்லாம்
பொய்யாய் போச்சு.
ராஜபக்ஷே துப்பாக்கிக்கு
அசோக சக்கரம்
முத்திரை வைத்ததால்
இந்திய முகத்திரை
கிழிந்து போனது.
தமிழன் பிணநாற்றம்
ஐ.நா வையும் தொட்டது.
சுட்டது மிருகம்.
வீழ்ந்தது மானிடம்.
நியாயம் எங்கே?
உலகம் கேட்டது
உலுக்கி கேட்டது.
உலுத்தர்கள் ஏன்
ஊமைகள் ஆயினர்.
பெட்ரோல் மொழியே
அமெரிக்கா அறியும்.
மனித ரத்தம் வெறும்
சிலிகான் ரத்தமா?
சிலிர்க்கிறது தமிழா
சிந்தனை செய்வாய்.
தூதர்கள் வருகிறார்.
தூதர்கள் போகிறார்.
லட்சம் சவங்கள்
தமிழ் சவங்கள்.
உலக நீதி மன்றங்களே
போர்க்குற்றம் புரிந்தோரை
போகவிடுதல்
முறையாமோ?
நீதியின் குரல்
ஓங்கட்டும்!
நீசர்கள் தந்திரம்
அழியட்டும்,
தமிழ் வாழ்க!
தமிழர் வாழ்க!
உலகம் யாவும்
ஒரு குரல் ஒலிப்போம்.
ஓங்குக தமிழ்க்குரல்.
எதிர்ப்பரல் யாவும்
உடைத்து நொறுக்குவோம்.
தமிழ் வாழ்க!
தமிழர்கள் வாழ்க!
=====================================ருத்ரா