வெறுக்கிறேன்

தீப்பெட்டி
தொழிற்சாலையில்
கந்தகத்தை சுவாசித்து
கைகள் கறுக்க
விரல்கள் வெறுத்த பின்னும்
காணிக்கையாக - பல
உயிர்கள் பலியானதை
நினைத்து பார்க்கையில்
வெறுக்கிறேன்....
இறைவன் படைப்புகளை.....!
பூந்தோட்டதில்
பூக்கள் பறித்து
சரமாக தொடுத்து
கடைக்கு
கொடுத்தனுப்பும்
கணவனை இழந்த
கைம்பெண்கள்
பூவை சூடாமல்
ஏங்கும் நிலைகண்டு
வெறுக்கிறேன்...
இறைவன் படைப்புகளை....!
குழந்தைகள்
அழும் போதும்
பால் வாங்கி வாரமல்
மதுபாட்டில்களை
கொண்டு வரும்
குடிகார அப்பாகளை
நினைக்கையில்
வெறுக்கிறேன்....
இறைவன் படைப்புகளை....!
சிலைகள் எல்லாம்
புது ஆடையில்
சாலை ஒரத்தில் சிறுவர்கள்
கிழிந்த ஆடையில்
பார்த்து வெறுக்கிறேன்...
இறைவன் படைப்புகளை....!
குழந்தைகளை
வளர்த்தெடுத்த
தாயும்,தந்தையும்
ஆதரவின்றி
முதியோர் இல்லத்தில்
அனுப்பிய பிள்ளைகளை
நினைத்து வெறுக்கிறேன்....
இறைவன் படைப்புகளை.....