கை பேசி - அதில் கால் பேசும் தமிழா!

குடிக்க வாட்டர்
தண்ணீரில்லை
குளிக்க ஹீட்டர்
வெந்நீரில்லை
சமைக்க குக்கர்
கொதி சமைப்பானில்லை
கார் ரிப்பேர்
பழுதான வண்டியில்லை
டாடி சுத்த வேஸ்ட்
அப்பன் பயனில்லை

இதழுக்கு லிப்ஸ்டிக்
பூச்சந்து
நுதலுக்கு ஸ்டிக்கர்
ஒட்டும் பொட்டு
அவள் அம்மா இல்லை
மம்மி?

போறது பிகர் –
பெண்ணில்லை
மச்சி அது டக்கர் - அழகில்லை.

கை பேசி - அதில்
கால் பேசும்
தமிழா!

கொஞ்சம் யோசி
நினை
நினை வாய் பேசு
தமிழால்

தலை இழந்தால்
முறை இல்லை.

மறைந்தா போனால்
நம்தமிழத்தாய்

எழுதியவர் : (27-Jun-12, 9:32 am)
பார்வை : 217

மேலே