என் சுவாசக் காற்றே

என் சுவாசக் காற்றே,
உன் மூச்சை சுவாசிக்கிறேன்,
நீ கடந்து செல்லும் பாதை எங்கும்
நான் வருகிறேன்,
நீ கடந்து செல்லும் பாதையில்,
கல் முள் இவற்றை கடந்து,
செல்கிறாய்.
அவற்றில் உன் பொன் மலர் பாதமாய்,
நான் வருகிறேன்,
நீ மிதிப்பாய் என்று நினைத்தல்ல,
உன் பொன் மலர் பாதம் காக்கவே,
என்று உன்னை மனதில் சுமந்தேனோ,
அன்றே என் உயிரை உயில் எழுதினேன்,
என் ஆயுளின் சரிபாதி உனக்கு என்று.

எழுதியவர் : nisha (28-Jun-12, 4:08 pm)
பார்வை : 184

மேலே