சங்கமம்

நீ போகும் பாதையில் உன் நிழலாக நானும் சேர்ந்தே பயணிக்கிறேன்,
நீயும் நானும் என்பதற்காக.
சமுத்திரமே உரைவிடமென வாழும் அலையாக நான் பிறக்கிறேன்,
இருவரும் ஒருவரே என்பதற்காக.
உடலினுள் ஒட்டிக்கொண்டு வாழும் இதயத்தை வேருடன் அறுத்து இதுவும் உனக்கே என்று எடுத்துரைக்க மௌனம் என்னும் புது மொழியை
ஈன்றெடுக்கிறேன்.
எத்துனை தவங்கள் செய்திடல் வேண்டுமோ?
உன்னைச்சேர,
பகுத்தறிவும் மனஉறுதியும் ,
மாய்ந்து போனது உன் மாயையினால்,
விழி என்னும் திரைகடலில்
கண்ணீர் வற்றிடவே
ஜடம் என்னும் பெயர் கொள்வேன்,
உன்னை காணும் போது.
உன் பிரிவு ஒன்றினால்
வாழ வைதுகொண்டே வாட்டுகிறாய்.
ஊக்கமும் உடைந்ததே ,
மனமோ தளர்ச்சி கண்டது.
உடல் இழைத்தாலும்
உயிர் வளர்ச்சி கண்டது.
அது உன் உயிர் என்பதால்.
கண்களை வாசலாக்கி,
இமைகளை காவலாக்கி,
இதய அறையினை சுத்தப்படுத்தி,
உனக்காய் காலமெல்லாம் காத்திருக்கிறேன்.
காத்திருப்பது தொடராமல்,
கன நிமிடமாவது காட்சி கொடுத்தல்,
ஜடம் அது உயிர்பெறும்.

எழுதியவர் : nisha (28-Jun-12, 3:55 pm)
சேர்த்தது : jasminenisha
பார்வை : 165

மேலே