...குழந்தை

எத்தனை எத்தனை ஏக்கங்கள்
எத்தனை எத்தனை கனவுகள்

அத்தனைக்கும் நீதான்
எத்தனை அற்தனங்கள்..!!

இதயத்தின் கனவுகள் - இங்கு,
வயிற்றில் வளர்கிறது..!

வாழ்கையின் வாசல் திறந்து,
பனிக்குட நீர் தெறித்து நீ வருவதெப்போது..!

கண்கண்ட கனவு - இப்போது
கண்பார்த்து தவிக்கிறது உன் வருகைக்கு.

வாழப்பிறந்தவனே, - எனை
அன்பால் ஆளப்பிறந்தவனே..!

வாழ்க்கையின் அர்த்தங்கள் சொன்னவனே!
வந்தென் மடியில் தவழ்வதெப்போது...!

உன் வருகையை நோக்கி, - இந்த
கவியோடு நானும் காத்திருக்கிறேன்..

விரைந்து வா... எங்களோடு
விளையாட நீ வா...!!

- கவிஞர். கவின்முருகு

எழுதியவர் : கவிஞர். கவின்முருகு (30-Jun-12, 2:09 am)
Tanglish : kuzhanthai
பார்வை : 206

மேலே