காலத்தின் சுவடுகள்
அன்பின் வழியே
என்றும் -நீ
பண்பின் திசையே
என்றென்றும்-வாழ
தினமும்
நடந்திடுவோமே !
காடு வெளி எங்கும்
சோலைகள்
சாலைகள்-நாடு
நகரங்களெல்லாம்
விளைச்சல்கள்
நெகிழிக் குப்பைகளாய்...!!
நஞ்சை புஞ்சை
வயல்களில் எல்லாம்
பண்ணை விரிப்புகள்
பல மாடிக் குடில்கள்
நீச்சல் குளங்கள்
கலர்மீன் தொட்டிகள்
எங்கெங்கும்
தொங்கும் தோட்டங்கள்
அரண்மனைக் கூடங்கள்
காட்சிப் பொருளாய் !
மனிதங்கள்
சந்தி சிரிக்கின்றன
ஏக்கர் ஏக்கர்களாய் !
புரோக்கர்களிடமும்
கந்து வட்டிக் காரர்களிடமும்
வாழ்க்கையைத்
தொலைத்துவிட்ட
மனிதக் கூடுகளாய்
இன்றுமே!