போதும் இந்த இடைவெளி.....
போதும் இந்த இடைவெளி ...
தேடுகிறார்கள் பலரும் நம்மை...
அகண்ட இரவு விசாலமான வீதி
நீளமான மௌனம் வெளிச்சமான நினைவுகள்
நானும் அவனும் -
நான்கு கால்கள் -ஒரு பாதைக்கான பயணம்
ஒரு பார்வைக்கான நான்கு விழிகள்
எப்போதும் கவிதைத்தேடல்கள்
இன்றும் அதே வீதி
நீளமும் விசாலமும்
எல்லோரும் தேடுகிறார்கள்
எங்களை-இரவிலும் ,வீதியிலும்
வெளிச்சத்திலும்
எழுத்துக்களில் தேடவில்லை ஒருவரும்
நாங்கள் தேடிக்கொண்டிருக்கவில்லை
எங்களை...