என் தந்தை நினைவில் 15 அகவை....
கருவோடு எனை தாங்காவிடினும் உன்
உயிரோடு தாங்கியவரே.............
சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள்
பிரித்து வைத்தன அன்று-ஆனால்
காலமே உன்னை எமை விட்டு பிரித்து
மூவைந்து ஆண்டுகள் ஆனதையா இன்று
சொந்தங்கள் பந்தங்கள் எல்லாமே
தூர வைத்து பர்த்ததையா அன்று உன்னை,
வறுமையின் மைந்தனாய்
மதுவின் மடியில் தவழ்ந்ததினால்.............
எனக்கன்று புரியலையே உன் வேதனை -ஆனால்
புரிந்து கொண்டேன் இன்று
அதை நான் அனுபவித்ததால்...........
நீ செய்த தவம்,
எழுந்து விட்டோம்
உன் பிள்ளைகள் நாம்........
தூரவைத்த சொந்தங்கள் எல்லாமே
தேடி வருகுதப்பா...........
நீ மட்டும் இல்லை எம்மோடு ....
இருந்தும் வாழ்வாய்.....
எம் நெஞ்சோடு....
வருவாய் மீண்டும்
எம்மோடு.......