தலைப்பு தேவையில்லை!

வலுத்தவன் காலுக்கு
இளைத்தவன் செருப்போ!

சட்டம்
வளைத்தவன் சொல்லுக்கு
சளைத்தவன் பொறுப்போ!

நிலைத்தவன் வாழ்வதற்கு
இல்லை ஒரு
மதிப்போ!

இங்கே
உழைத்தவன் வயிற்றில்
எரிவது அடுப்போ!

எளியவன்,வறியவன்
பாமரன் என்றே
பட்டங்கள் பெருகுது
கண்டீர்!

ஏழை நாடென்று
கூவிக்கூவி
கிடைத்த பிச்சை
பதுங்குது கருப்பாய்
இங்கு!

வரம் ஒன்று
கேட்போம்!
வாழ வழி ஒன்று
கேட்போம்!

நம் நிலைமாற
நல் உதயம் காண
இனி ஒரு விதி செய்வோம்!

ஓட்டை
ஓட்டையில்லாமல்
உரியவற்கே அளிப்போம்!

எழுதியவர் : சரவணா (6-Jul-12, 9:30 am)
பார்வை : 239

மேலே