நெஞ்சம் சொல்லிடும் உண்மை..

துள்ளி எழுந்து ,
தொடர்ந்து நடந்து,
தெள்ளத் தெளிவாய் தேர்ந்துநின்று,
முடிந்தது என்று சொல்லாமல்,
முயன்றேன் என்றும் பகராமல்,
முடித்தேன் என்று சொல்லு..
விடியட்டும் என்று பார்க்காமல்,
விதிதான் என்றும் முனகாமல்,
வினைகள் தொடர்ந்து ஆற்று...
வழித்தடம் வைக்கும் சோதனை..
வயதில் இல்லை சாதனை...
.விழி பட்டு விலகும் வேதனை!
நெறிகொண்டு செய்திடும் செயல்களில்
நிமிர்ந்து நிற்கும் வெற்றியில்..
நெஞ்சம் சொல்லிடும் உண்மை..
நிலத்தில் உயர்த்திவைக்கும் நம்மை!