காதல் போதை இது ...

காதல் போதை இது ..தமிழின்பால் ..சமூகத்தின்பால் ..

தளப் படைப்பாளிகளே ...

சில விளக்கங்களும் சில வினாக்களும் - என்ற தலைப்பின் கீழ் கட்டுரைப்பகுதியில் ...

நண்பர் ரௌத்திரன் இன்று நான்கைந்து படைப்புகள் பதித்திருக்கிறார் தளத்தில் ...அனைவரும் சென்று
உங்களுக்கு வேண்டிய அறிவுச்சார் கருத்துக்களை அள்ளிப்பருகிக் கொள்ளுங்கள் ..

முக்கியமாக இளம் படைப்பாளிகள் ..வளரும் இளம் குருத்துகள் ..கருத்தில் தடுமாறும் தளிர்கள் ..அனைவரும் கண்டிப்பாக பார்த்து படித்து பயன் பெற வேண்டுகிறேன் ...

பலர் பார்வைகளுக்கு கரடுமுரடாக தெரிந்தாலும் அவர் பலாப்பழம்தான் ...

பிளந்துப்பாருங்கள் ...

அனுவைப்பிளந்த ஆற்றலும் உங்களுக்கு கிடைக்கலாம் ..

கடலைக் கரைக்கும் உங்கள் கனவும் அதில் தெரியலாம் ..

முட்கள் சூழ்ந்த பூக்களாகவும்..அவர் பூத்திருக்கலாம்..பூக்களை மட்டும் பறித்துக் கொள்ளுங்கள் ..

படைப்பை படிப்பதும் ஒரு அனுபவமாக இருக்கட்டுமே ..

நல்ல விசயமாக என் மனதில் பட்டது ..முகவரி சொன்னேன் அவ்வளவுதான் ..இதற்கும் ஏதாவது சாயம் பூசிட வேண்டாம் ..

நன்றி அனைவருக்கும் ..!

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (9-Jul-12, 11:58 am)
பார்வை : 313

மேலே