தாய்மை
![](https://eluthu.com/images/loading.gif)
ஆண்டவன் படைப்பினில்
அத்தனையும் அதிசயம்
மனிதன் மட்டுமே
அவன் படைப்பில் தனித்துவம்
ஆணிடத்தும் பெண்ணிடத்தும்
அமையப் பெற்ற சிறப்புகளில்
சிகரம் தொடுவது பெண்மை
முதுமை வந்தாலும்
முழுமை பெறாத பெண்மை-ஓர்
முத்தை சுமந்ததும்
முழுமை பெறுவதே உண்மை
வான்புகழ் வள்ளுவன் சொன்ன
வாய்மையிலும் சிறந்தது தாய்மை
உனக்கும் வந்ததே அந்தப் பெருமை.