என் மனைவி
உன் கூந்தல் மனத்தில் புதைந்து நான் தினம் தினம் இறந்துகொண்டிருந்த
பொழுது நீ இறந்த செய்தியை
என்னால் எப்படியடி உணர முடியும்
மனைவியே....
ஆழ்ந்த சிந்தனைகளை உன்
நெஞ்சுக் குழியில் புதைத்ததால்
உன்னை புதைக்க வெட்டப்பட்ட
குழியை அறியமுடியவில்லயடி
துணைவியே....
உன் சேலையெனும் சிறையில்
விரும்பி அகப்பட்டுக்கொண்ட
எனக்கு ஒருபோதும் விடுதலை
தேவையில்லையென்று தெரிந்தும்
நிரந்தர விடுதலையென்ற பெயரில்
நீ தந்த மரண தண்டனையைக் கூட
உணர முடியாமல் இன்றும்
அலைகிறேன் வீதியிலடி உறவே....
இரவில் என்னுடன் இணைந்த
இல்லத்தரசியின் இமைகளை
மண் கொண்டு மூட வேண்டுமேயென்று
இறுதியில் என் கரங்களே தற்கொலை
செய்து கொண்டதடி தாரமே.......
என்றும் உன்னையே உருக்கி என்னில் ஊற்றிகொள்ளும்
உன் உன்னத புருஷன்........