மோதிரம்
ஒரு கிராமத்தில் ஒரு பெருமைக்காரன் இருந்தார்.அவர் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று ஒரு விலைமதிப்புடைய மோதிரம் வாங்கினார்.
அவர் தனது மோதிரத்தை
அனைவரிடமும் பேசும் போதும் காட்டிக்கொண்டே பேசினார்.ஆனால் எவரும் அந்த மோதிரத்தை பற்றி கேட்கவேயில்லை
ஒரு நாள் அந்த கிராமத்தில் வைக்கோல்போரில் தீ பிடித்து எரிந்தது அப்போது அனைவரும் தீயை அணைக்க நீர் ஊற்றினார்.
நமது பெருமைக்காரர் நீரை அங்கே ஊற்று இங்கே ஊற்று என்று கையில் உள்ள மோதிரத்தை காட்டி காட்டி கூறிக்கொண்டே இருந்தார்.
ஆத்திரமடைந்த வைக்கோல்போர்காரர் நீ மோதிரம் போட்டிருப்பது தெரிகிறது உன் வேலையைபார்த்துகொண்டுபோ என்று கூறினார்.
அதற்கு நமது பெருமைகாரர் இதை முதலிலேயே கூறியிருந்தால் வைக்கோல்போர்
ஏன் தீ பிடித்து எரிகிறது என்று கூறினார்.
இதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சியுற்றனர்.............