புது முயற்சி....

விண்ணிலோர் வீதி செய்து
......நகர்ந்திடும் நிலவைக் கண்டேன்.
எண்ணிலாக் கண்கள் கொண்டு
......பகர்ந்திடும் கதைகள் கொண்டேன்.
மண்ணுளோர் மறைத்த பாவம்
......படிந்திடும் கறையாய் நிலவில்.
கண்ணிலோர் வளரும் தெய்வம்
......இடிந்திடும் சிலையாய் உள்ளே.

எழுதவும் வார்த்தை இல்லை-மண்ணிலே
.......மனிதமே தொலைந்த இந் நாளில்.
தொழுதிடும் கையினுள்ளும் -வன்முறை
........புனிதம் போல் புகுந்த நாளில்.
எழுதிடும் கையின் இச்சை-இரண்டகக்
........கணிதம் பேசி பொய்களை உண்மையாக்கும்.
விழுந்திடும் மானுடம் மரமாய்-வன்மையின்
.........அணியிலாக் கவிதை அழகிலாஆரணங்காய்.

எழுதியவர் : rameshalam (12-Jul-12, 8:04 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 316

மேலே