இந்த கால படிப்பு.....

பொதி சுமக்கும் கழுதைக்கூட
பொறாமை பட்டுவிடும்!
நான் சுமக்கின்ற புத்தகங்களின்
எண்ணிக்கையை கண்டு...

புதிய சிந்தனையில் படிக்க புதிதாய்
ஒன்றும் புத்தகத்தில் இல்லை!!!
அச்சடித்த எழுத்துக்களை படிக்கிறேன்
படிப்பது என்னவென்று தெரியவில்லை!!!

விலை பட்டியலை போட்டு வைத்து
வியாபாரம் நடக்கிறு கல்வித்துறையில்!!!
விளையாட சில நேரமும், விடுமுறை
நாட்களும் இல்லை ஒரு தேதியில்!!!

மனப்பாடம் செய்ய சொல்கிறார்கள்
என் மூளைக்கு சோர்வு தர..
புது செயல்முறை பாடம் என்று வரும்
என் மூளைக்கு வேலை தர...

மடியில் வைத்த புத்தகம் மாலை
பொழுதிலும் தொடர்கிறது
பாரதி சொன்ன வார்த்தைகள்
ஒவ்வொன்றாய் அழிகிறது

எழுதிக்கொண்டே இருக்க என்
கைகள் என்ன எந்திரமா?
இருந்தும் எழுதுகிறேன் ஒரு
இருபது மதிப்பெண்களுக்காக...

மதிப்பெண் தகுதி அடிப்படை முறை
மாறும் வரை மாறாது மாணவர் எதிர்க்காலம்...
கலாம் கண்ட மாணவர் சமுதாயம்
கனவாய் போகாது... மாறிப்போனால்
இந்தக் கால படிப்பு!!!!

எழுதியவர் : Golden Prabhuraj (12-Jul-12, 8:09 pm)
Tanglish : intha kaala padippu
பார்வை : 237

மேலே