ராகங்கள் பதினாறு சொல்வாயா உன் வரலாறு 555

பெண்ணே.....

நீ என் கண்ணில்
படவும் இல்லை...

கனவில் வரவும் இல்லை...

பேசாத வார்த்தைகள்
ஆயிரம்...

உன்னோடு நான் எப்போது
பேச போகிறேன்...

யார் நீ...

எங்கு இருகிறாய்...

மூன்று மதத்தில் நீ
எந்த மதம்...

முக்கனிகளில் நீ
எந்த கனி...

அறுசுவைகளில் நீ
எந்த சுவை...

ராகங்கள் பதினாறு
நீ சொல்வாயா...?

உன் வருகையின் வரலாறு...

கர்நாடக சங்கீதம் எழுபத்தி எட்டு
நீ அதில் எதடி...

உன் பிறப்பிடம்
நான் அறிவேனா...

நீ வளர்ந்த அழகை
நான் ரசிபேனா...

கொள்ளாமல் என்னை
கொள்பவளே...

நீ எங்கு இருகிறாய்...

வாடி என் முன்னே...

மணவறையில் வருவாயா...?

மனைவியாக வருவாயா
எனக்கு...?

சொல்லடி பெண்ணே
உன் இதழ் திறந்து...

காத்திருக்கிறேன் நான்
காலமெல்லாம் உனக்காக.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (14-Jul-12, 8:45 pm)
பார்வை : 226

மேலே