இது மட்டும் தான் தமிழர் களின் திருநாளா ...?

பிறந்த நாள்
பிறந்த தினம்
மலர்ந்ததினம்
கிறிஸ்துமஸ்
காதலர் தினம்
சுதந்திர தினம்
புத்தாண்டு
நண்பர்கள் தினம்
இது மட்டும் தான் தமிழர் களின் திருநாளா ...?


இதைத்தான் எழுத்து.காம் -ல் நாம் தமிழ் வாழ்த்து அட்டைகளாக பரிமாற்ற வேண்டுமா...?

அப்படிஎன்றால் இவை எல்லாம் யாருடைய பண்டிகைகள்....?


1 )சித்திரை முழுநிலவு திருநாள்.
.(அனைவரும் பகை மறந்து ஒன்றாக ஆற்றங்கரையில் அமர்ந்து முழுநிலவில் சங்கமிக்கும் அந்த புனிதமான நாள்...).

2 )வைகாசி விசாக திருநாள்...

3 )ஆணி திருமஞ்சனம்

4 ) ஆடி பெருக்கு -

(வந்தது தண்ணீர்... இனி தான் விவசாயம் என்று ஆரம்பமாகும் நாள்.
அந்தந்த ஊரில், புதிதாக கரைபுரன்டு வரும் தண்ணீரை கண்டு மகிந்து, நம்பிகையுடன் கொண்டாடும் பண்டிகை இது).

5 )ஆவணி அவிட்டம்

6 )புரட்டாசி சனிக்கிழமை

7 )ஐப்பசி தீபாவளி,

8 )கார்த்திகை தீபம்,

9 )மார்கழி திங்கள்
(பீடுடை மாதம்,
திருப்பாவை திருவெம்பாவை.. )

10 ) தை பொங்கல்...

விவசாயிகள் அறுவடை திருநாளாக கொண்டாடப் படும் பொங்கல் திருநாளன்று மண் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது..

11 ) மாசி மகம்,

12 ) பங்குனி உத்திரம்.

இதுதவிர தமிழுக்கு வேறு பண்டிகைகளா இல்லை...?
வள்ளுவர் தினம்,பாரதியார் தினம், போன்ற பெரும் புலவர்கள் பிறந்ததினம் அன்றுகூட நாம் வாழ்த்துக்களை பரிமாறலாமே...!


பிறந்த நாள் ,பிறந்த தினம்,மலர்ந்ததினம் --- இவை உலகில் உள்ள அனைவரும் கொண்டாடக்கூடிய தினம்..


கிறிஸ்துமஸ்---- தமிழர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாடக்கூடிய பண்டிகை..


காதலர் தினம்--- நமது நாட்டில் திணிக்கப்பட்ட உலகம் முழுவதும் கொண்டாடக்கூடிய ஒரு கலாசாரம்...


சுதந்திர தினம் ----நமது நாடே கொண்டாடும் திருநாள்...


புத்தாண்டு 2013 ---- சத்தியமாக இது தமிழர் பண்டிகை இல்லை'...


நண்பர்கள் தினம் --- மேற் கூறியது போல் நமது நாட்டில் திணிக்கப்பட்ட, உலகம் முழுவதும் கொண்டாடக்கூடிய ஒரு கலாசாரம்..

ஆக... தமிழ் வாழ்த்து அட்டை என்ற பெயருக்கு ஏதாவது ஒரு அர்த்தம் உள்ளதா....? இது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்...தமிழை கொண்டாட வேண்டிய நாமே தமிழ் கலாசாரத்தை மறப்பதா... இதுதான் தமிழனுக்கு அழகா....?

தமிழ் தமிழ் என்று மார் தட்டி பேசுவோர் அனைவரும் தமிழ் மாதத்தை வெறுப்பது ஏனோ...? நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மை......


இப்போதைக்கு அந்த நிலைமை இல்லை என்றே தோன்றினாலும், ஒரு கலாசாரம் மொழி, அழிவதற்கு உண்டான அத்தனை அம்சங்களும் இப்போது தமிழுக்கும் உள்ளது.. பாரதி ஒரு தீர்க்க தரிசி என்று நிரூபித்து விட்டான்...

எழுதியவர் : பசுவைஉமா (16-Jul-12, 8:47 am)
சேர்த்தது : pasuvaiuma
பார்வை : 295

மேலே