வா... வசந்தத்தை தேடி நாம் வாழலாம்...

வா... வசந்தத்தை தேடி நாம் வாழலாம்...
என் இதயம் துடிக்கும் ஓசை
இரட்டிப்பானதே
அது ஏனோ..
உனக்கும் சேர்த்து துடிப்பதால் தானோ...?

உன்னை
நினைக்கும் போதெல்லாம்
என் சுவாசத்தில்
ஓர் புத்துணர்ச்சி...

கவலைகளால்
மனது முழுக்க
மரத்துப்போனபோதும்
உன்னைப்பார்த்த நொடிகளிலேல்லாம்
மனது மகிழ்ச்சியைமட்டும் தான்
பிரசவிக்கிறது...

நான் மட்டுமல்ல
என் பேனா கூட
உன் பெயரைமட்டும்தான்
மனனம் செய்து வைத்திருக்கிறது...

ஊருக்கு பயந்து..
உறவுக்கு பயந்து..
நம் காதல்
உருக்குலைந்து போவதற்கு முன்னர்
வா...
வசந்தத்தை தேடி நாம் வாழலாம்...!!

எழுதியவர் : ரி.எ.விமல் (16-Jul-12, 3:07 pm)
பார்வை : 168

சிறந்த கவிதைகள்

மேலே