ஆத்தி இது வாத்துக் கூட்டம் ..........

ஆத்தி இது வாத்துக்கூட்டம் !
அழகாக சேற்றில் ஆட்டம் !
பக்பக் என்ற பாட்டுச்சத்தம்
பாட்டில்நம் நெஞ்சம் சொக்கும் .....
பின்னழகை ஆட்டி பெண்ணின்
நளினம்தனை காட்டும் !
வாயழகை சொல்ல என்னில்
வார்த்தை வந்து முட்டும்........
விதவிதமாய் வண்ணங்களில்
விந்தைகாட்டும் அழகு !
விட்டெனவே இரையை கொத்தும்
வீரமான அலகு.............
கூட்டமாக நீந்திக்கொண்டு
குதூகலமாய் ஆடும் !
கூண்டுக்குள்ளே சேர்ந்தபின்னால்
சோககீதம் பாடும்.................