தேநீர் வழங்கிய தேவதை
வானத்தில் பறந்தபோது
வசந்தத்தின்
தென்றலைப் பார்த்தேன்
ஓரத்து சீட்டில் அமர்ந்திருந்தேன்
ஓரிரு வரிகளே எழுதியிருந்தேன்
தேநீருடன் வந்தாள்
விமான விருந்தோம்பலாள்
சொல்லவில்லையே என்றேன்
சொல்லியிருக்கிறீர்களே என்றாள்
புன்னகைத்தாள்; படித்தாள்
"வானத்தில் மேனகைகள் உண்டு
கேள்விப்பட்டிருக்கிறேன்
இன்று பார்த்தேன் "
யாரோ என்றாள்
தேநீர் வழங்கிய தேவதை
என்றேன்
விழியை உயர்த்திச் சென்றாள்
திரும்பிப் பார்த்து
மீண்டும் புன்னகைத்தாள்
-----கவின் சாரலன்