[305] படித்ததும் வெடித்தது.. [09]

படித்த கவிதை: ரத்தத்த சிந்தனுங்க ..
கவிஞர் : பொற்செழியன்
---
வெடித்த கவிதை:

கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்தம் ஒன்று வந்தது..
சுத்தி நின்று உலகம் வாயைப்
பொத்தி நின்று வியந்தது!
சுத்த மற்ற பேர்கள் கையில்
சுதந்தி ரம்தான் வீழ்ந்தது!
புத்தி கெட்ட ஆட்சி யாலே
பொங்கி ஊழல் ஓடுது!

சத்தி யற்ற மக்க ளுக்குச்
சாகத் தானே தோணுது!
முத்தி வேணும் என்ற நெஞ்சு
முண்டா சைத்தான் எண்ணுது!
சத்தி சத்தி சத்தி என்று
கத்திச் சண்டை கேட்குது!
புத்தி கெட்ட பேர்க்குப் புத்தி
புகட்ட எண்ணி ஓடுது!
-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (21-Jul-12, 7:15 pm)
பார்வை : 303

மேலே