மலர் கண்காட்சி

விரல்களை பிண்ணிக்கொண்டே
உரையாடியபடி நடக்கிறோம்
நடந்த தொலைவு
நம் கால்களுக்கு தெரியாது
உடல் களைப்போ
உடலுக்கு தெரியாது
ஏனென்றால்...
நானிருப்பது உன்னோடு
நீயிருப்பது என்னோடு
பிறகெப்படி நமக்கு
தொலைவும், களைப்பும் தெரியும்.
இப்படியாக.....
மலர் கண்காட்சிக்கு சென்றோம்
அங்கே
மனிதக் கண்கள் அத்தனையும்
மலர்களை ரசித்து சுவைத்தன
மலர்க் கண்களோ இவளை
மட்டுமே ரசித்து சுவைத்தன
சரி வா... போகலாம் என்றேன்
அவள் ஏன் என்றாள் கோபமாக
மலர்கள் அத்தனையும்
உன்னை ரசிப்பதை
மனிதர்கள் பார்ப்பதற்குள்
நாம் சென்று விட்டால்
நல்லது என்றேன்
வெட்கப் பூக்களை
முகத்தில் பூக்கச் செய்து
என் தோளில் உதிர்த்தாள்
மலர்கள் ஏக்கதுடன் என்னவளை பார்த்தன
நான் பெருமையுடன் மலர்களை பார்த்தே
என்னவளை அணைத்த படி
மெல்ல வெளியேறினேன்.