ரோபாவின் பாதங்கள்

பரதம் ஆடுது ரோபோட் - அங்க
பாருங்க பாதங்கள் ஸ்வீட் ஸ்வீட்....

எலெக்ட்ரிக் ஒயரே நரம்பு
கலக்குது கால்கள் இரண்டு

தாம் ததிங்கினத்தோம்
தீம் ததிங்கினத்தோம்

மனிதனே ஒழுங்காப் பாடு - இல்லேன்னா
மண்டையில் குட்டும் ரோபோட்

மச்சான் டீ குடிக்க வான்னு ஒன்ன
மள மளன்னு கூட்டுப் போகும் ரோபோட்

தேமேன்னு நீ முழி - இரும்பு
தேகத்தில் ரோபோட் ஜாலி.........!

உன் கிரெடிட் கார்டில் சார்ஜ் வரும்....கேர் புல்...!
உன்னிடம் சொல்லாமல் ரோபோட்....

ரெண்டு தங்கக் கொலுசு வாங்கியிருக்கு...ஆமா..!
சங்கீத சபாவில் நாளைக்கு டான்ஸ் இருக்கு...!

சந்தோசமா வந்திருந்து... சலிப்பின்றி ரசித்திடு...!

ரோபாவின் பாதங்கள்.......அழகு
ரொமாண்டிக் கவிதைகள்.........!

எழுதியவர் : (23-Jul-12, 12:02 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 176

மேலே