உள்ளே உதைக்கும் பாதங்கள்
பாதங்களால் பாடல் எழுதுகிறான் - என் மகன்
பக்குவமாய் உள்ளுக்குள் உதைத்து.......!
பாசத்துடன் தடவிப் பார்க்கிறேன் .....
பவ்யமாய் மறுபுறம் உதைக்கிறான் ...........!
தாய்மை என் வலியையும்
தமிழ் கவிபோல் ரசிக்க வைக்கிறான் .......!
கர்ப்பிணிப் பெண் என்னை
கண்ணியத் தாயென ஆக்கப் போகிறான்...!
இவன் வீரக் கால்களுக்கு இதோ
இரும்புப் பூட்சு செய்து விட்டேன்........
இந்திய ராணுவத்தில் சேர்த்து விடுவேன்
இவன் லெப்ட் ரைட் என நடந்து செல்வான்....!
பரம் வீர் சக்ரா பதக்கம் பெறுவான் - நமது
பாரத தேசத்தை காத்து நிற்பான்.........!