என் மரபு கவிதை நீங்கள் ..........
மணாளனே ..நீங்கள் பார்த்த மலர்கள் ..எல்லாம் ....
பூந்தோட்டமே நம்மை காண வந்ததென ..
ஆரவாரம் கொள்கின்றனவாம் ....
என் நாதமே ...நீங்கள் கேட்கும் இசை எல்லாம் ...
ஏழிசை கீதமே.. நம்மை ரசிக்கிறதே என
தாண்டவம் ...ஆடுகின்றனவாம் ..
கண்ணாளனே.. நீங்கள் காணும் காட்சி எல்லாம் ஓவியமே நம்மை காண வந்ததே என ...
உற்சாக படுகிறதாம் .....
வசீகரனே ...நீங்கள் படிக்கும் இந்த கவிதை கூட...
மரபு கவிதையே ...நம்மை வாசிக்கிறதே.....என . விழா கோலம் .... கொள்கிறதாம் ..